search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை ராணுவம்"

    இலங்கை ராணுவத்தை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Fishermenstrike #Fishermen

    கன்னியாகுமரி:

    ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடித்து அவர்களது உடமைகளை பறிமுதல் செய்வதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

    இந்த மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் விசைப்படகுகள் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெளியூர் வியாபாரிகள் இங்கு வராததால் துறைமுகம் மற்றும் மீன் சந்தை வெறிச் சோடி காணப்பட்டது. வருகிற 8-ந்தேதிக்கு முன்பு இதில் நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். #Fishermenstrike #Fishermen

    வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
    கொழும்பு:

    வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நாய்களை விட கீரிகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருப்பதாகவும், அவை சிறப்பாக வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாகவே கீரிகளை பயன்படுத்தி வெடிகுண்டுகளை கண்டு பிடிப்பதற்கு பயிற்சி நடந்து வந்தது. அதில் நல்ல பயன் கிடைத்ததையடுத்து இப்போது 9 கீரிகளை ராணுவத்தில் சேர்த்துள்ளனர். அதில் 2 கீரிகளுக்கு பணிகள் வழங்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டு வருகிறது. மற்ற 7 கீரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ராணுவ மேஜர் சுபுன்ஹேரத் கூறியதாவது:-

    வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும் மோப்ப நாய்கள் வெளிநாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகின்றன. அவை குளிர்பிரதேசத்தில் வளரும் நாய்கள் ஆகும். அவற்றை இலங்கைக்கு கொண்டு வந்து பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் இதன் செலவும் அதிகமாகிறது.

    எனவே தான் மோப்ப சக்தி அதிகம் கொண்ட கீரியை இதற்கு பயன்படுத்தலாமா? என்று ஆய்வு மேற்கொண்டோம். இது சிறப்பான பலனை கொடுத்துள்ளது. நாயை விட கீரிதான் நன்றாக செயல்படுகிறது. நாயை பொறுத்தவரை தனது தலைக்கு கீழ் உள்ள வெடிகுண்டுகளையே மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க முடியும். ஆனால் கீரிகளால் தரைப்பகுதி மட்டும் அல்லாமல் தனது தலைக்கு மேலே உள்ள வெடிகுண்டுகளையும் கண்டுபிடிக்க முடிகிறது. வெடிகுண்டுகளை கண்டுபிடித்ததும் அதை தோண்டி எடுப்பதற்கு பயிற்சி அளித்தோம். அதனால் கீரிகள் பாதிக்கப்படுவதால் இப்போது அதை தகவல் சொல்ல மட்டுமே பயன்படுத்துகிறோம்.

    ஒரு இடத்தில் வெடிகுண்டு இருப்பது தெரிந்தால் அந்த இடத்திற்கு சென்று கீரி அமர்ந்து கொள்ளும் அதை வைத்து எளிதாக வெடிகுண்டுகளை அகற்றி விடலாம்.

    இலங்கையில் 3 வீதமான கீரிகள் உள்ளன. அதில் சாம்பல் நிற கீரி நன்றாக மோப்பம் பிடிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SriLankanArmy

    ×